×

தேனியில் வானவில் மன்றம் மூலம் கல்வி கற்கும் மாணவர்கள் 205 அரசு பள்ளிகளில் 18 ஆயிரம் மாணவர்கள் பயன்

*பிற மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரி திட்டம்

*கணிதம், அறிவியல் மீது அதிகரிக்கும் ஆர்வம்

தேனி : தேனி மாவட்டத்தில் வானவில் மன்றம் மூலமாக பள்ளிகளில் பயிலும் 18 ஆயிரத்து 101 மாணவ, மாணவியர் எங்கும் அறிவியல் யாவும் கணிதம் எனும் வகையில் கல்வி பயின்று வருகின்றனர்.தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றது முதலாக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தில் உள்ள அனைத்து ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின் கல்வித் திறனை மேம்படுத்திடும் வகையில் இல்லம் தேடிக்கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம் என பல்திறன் வளர்க்கும் கல்வியாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல்வரின் கனவுத் திட்டமாக நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பெண்கள் தங்கள் கல்வியை பள்ளிப்படிப்போடு நிறுத்தி விடக்கூடாது, பட்டப்படிப்பு, தொழீற்பட்டயம் மற்றும் தொழீற் பட்டப்படிப்புகளை படிக்க வேண்டும் என்பதற்காக பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமான புதுமைப்பெண் திட்டம் ஆகியவற்றை செயல்படுத்தி வருகிறார். இதுமட்டுமல்லாமல் பள்ளிக்கு செல்லும் அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியர்கின் கல்வியினை ஊக்கப்படுத்திடவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிடவும் கற்றல் இடைநிற்றலை தவிர்த்திடும் வகையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்தனைத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக அரசு தற்போது அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும்மாணவ, மாணவியர்களின் அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக புதியவற்றை அறிந்து கொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கிடும் வகையில் எங்கும் அறிவியல், யாவும் கணிதம் என்பதை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வானவில் மன்றங்களை பள்ளிகளில் தொடங்கியுள்ளார்கள். இத்தகைய வானவில் மன்றங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளன.

மாணவ, மாணவியர்களிடையே இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆர்வத்தினை வளர்த்தெடுத்து அறிவியல் கற்றலுக்கு பயன்படுத்துதல், அறிவியல் கற்பதன் மூலமாக கிடைக்கும் ஆர்வத்தினை தக்கவைத்தல் மூலமாக கிடைக்கும் ஆர்வத்தினை தக்க வைத்தல், இந்த ஆர்வத்தின் மூலமாக புதுமைகளை காணும் மனப்பாங்கினை வளர்தெடுத்தல், தாம் பெற்ற அறிவினை தமக்கான மொழியில் பகிர்ந்து அறிவியல் மொழி பழகுதல், அறிவியல் மனப்பான்மையை பரவலாக்குதல், அன்றாட வாழ்க்கையில் உள்ள அறிவியலை உணர்தல், சமூகவியல் இலக்கியத்துடனான அறிவியலை புரிந்து கொள்தல் ஆகியவை வானவில் மன்றங்களின் நோக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வானவில் மன்றங்களானது, தேனி மாவட்டத்தில் 99 அரசு நடுநிலைப்பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 6ம் வகுப்பு பயிலும் 725 மாணவர்களும், 639 மாணவியர்களும், 7ம் வகுப்பு பயிலும் 653 மாணவர்கள், 221 மாணவியர்கள், 8ம் வகுப்பு பயிலும் 639 மாணவர்கள், 640 மாணவியர்களுமாக 99 அரசு நடுநிலைப்பள்ளிகளில் மொத்தம் 3 ஆயிரத்து 971 மாணவ, மாணவியர்கள் வானவில் மன்றத்தில் சேர்ந்து பயின்று வருகின்றனர். 36 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு பயிலும் 452 மாணவர்கள், 481 மாணவியர்கள், 7ம் வகுப்பு பயிலும் 471 மாணவர்கள், 732 மாணவியர்களும் , 8ம் வகுப்பு பயிலும் 484 மாணவர்கள், 398 மாணவியர்க் என 36 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் மொத்தம் 2 ஆயிரத்து 718 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர்.

இதேபோல 70 அரசு மேல்நிலைப்பள்ளிகளி்ல் 6 ம்வகுப்பு பயிலும் 1720 மாணவர்கள், 2004 மாணவியர்கள், 7ம் வகுப்பு பயிலும் 1800 மாணவர்கள் 1999 மாணவியர்களும், 8ம் வகுப்பு பயிலும் 1857 மாணவர்கள், 2032 மாணவியர்களுமாக 70 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மொத்தம் 11 ஆயிரத்து 412 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். மாவட்ட அளவில் 205 அரசு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் 6ம் வகுப்பு பயிலும் 2 ஆயிரத்து 897 மாணவர்கள், 3 ஆயிரத்து 178 மாணவியர்கள் , 7ம் வகுப்பு பயிலும் 2, 924 மாணவர்கள், 2,952 மாணவியர்கள், 8ம் வகுப்பு பயிலும் 2,980 மாணவர்கள், 3,070 மாணவிர்கள் என மொத்தம் 18 ஆயிரத்து 101 மாணவ, மாணவியர் வானவில் மன்றத்தில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர்.
வானவில் மன்றத்தில் சேர்ந்து கல்வி பயிலும் தேனி அருகே ஊஞ்சாம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர் குருநாத் கூறுகையில், நான் அன்னஞ்சி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகின்றேன். தற்போது எங்கள் பள்ளியில் வானவில் மன்றம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வானவில் மன்றத்திற்கென தனி வகுப்பறை, பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் எங்களுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் செயல்விளக்க முறைகள் மூலமாக பாடங்களை நடத்தி வருகின்றனர். இதன்காரணமாக எனக்கு அறிவியல் மற்றும் கணித பாடங்களில் படிப்பதற்கு எனது ஆர்வத்தை தூண்டும் வகையில் வானவில் மன்றம் உள்ளது என்றார்.

தேனி அருகே ரெங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் கனிஷ்கர் கூறுகையில்,நான் ரெங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு பயின்று வருகிறேன். எங்களது பள்ளியில் வானவில் மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இம்மன்றத்தின் மூலமாக எங்களது பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த படிப்பகளுக்கு தனியாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் செயல்விளக்கங்கள் மூலமாக பாடங்கள் நடத்தி வருகின்றனர்.

இதனால் பாடங்களை எளிதில் புரிந்து கொள்ள முடிகிறது. வானவில் மன்றமானது எங்களது படிப்பினை தூண்டுவதற்கான அச்சாணியாக உள்ளது. மேலும் எங்களை போன்ற ஏழை, எளிய மாணவ, மாணவர்களின் கல்வியை மேம்படுத்திடும் வகையில் உள்ளது என்றார். ஏழை, எளிய மாணவ, மாணவியர்களின் கல்வி எவ்வகை சூழலிலும் தடைபட்டு விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு எண்ணற்ற கல்விசார் திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் நிலையில் வானவில் மன்றம் திட்டமானது இந்திய அளவில் பிற மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரி திட்டமாக அமைந்துள்ளது தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.



Tags : honey rainbow forum , Theni: 18 thousand 101 students are studying in schools through Vanavil Forum in Theni district, all science and maths.
× RELATED தமிழ்நாட்டில் 100 டிகிரிக்கும் கீழ் குறைந்த வெயில்